முதல் மொட்டை

எங்கள் வீட்டில் குழந்தைக்கு முதல் மொட்டையடிக்கும் போது, அம்மாக்களும் மொட்டை அடித்துக் கொள்வது வழக்கம். கட்டாயம் என்று இல்லை. ஆனால் அனைவரும் ஒரு தடவையாவது மொட்டையடித்து இருந்தனர். எனக்கு இந்த மொட்டை விஷயத்தில் மட்டும் உடன்பாடு இருந்ததில்லை. மற்றபடி ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை எனக்கும் உண்டு. எங்கள் பாப்பாவிற்கு 9 மாதம் ஆகும்போது மாமியார் மொட்டையடிக்க திருப்பதி போகணும் என்று சொன்னார்கள். நான் சரி அத்தை என்று சொன்னேன். திருச்சியிலிருந்து என் நாத்தனார் குடும்பமும் சென்னைக்கு வருவதாகவும், சேர்ந்து திருப்பதி போவோம் என்பதாக plan. ஒரு மாதம் இடைவெளியில் எனக்கு ஒரே மனப்போராட்டம். நான் முன்பு மொட்டை போட்டது school daysல தான். அதுவும் 7வது படிக்கும்போது. டைபாய்டு முடிந்த உடன் முடி ரொம்ப ஒல்லியாகி விட்டது. முடி பழையபடி நல்லா வளரணும்னா 2 மொட்டையாவது அடிக்கணும்னு சொன்னதால், Annual leave daysல 2 தடவை மொட்டையடிச்சிருந்தேன். கணவரிடம் நானும் மொட்டையடிக்கணுமா என்று கேட்டேன். அவர் உன் விருப்பம், உனக்கு விருப்பமில்லை என்றால் எந்த விஷயத்தையும் நீ செய்ய வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார்.
இதற்கிடையில் திருப்பதி போகவேண்டிய நாளும் வந்து விட்டது. ஒரு வெள்ளிக்கிழமையன்னிக்கு என் நாத்தனார் குடும்பம் திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தாங்க. சனிக்கிழமை கோவிலுக்கு போயிட்டு, நைட் கீழ்திருப்பதியில் தங்கிட்டு, மறுநாள் காளகஸ்தி கோவிலும் போலாம்னு பிளான். அது ஒரு புரட்டாசி சனிக்கிழமை. நிறைய கூட்டம். பீமாஸ் ஹோட்டல் ரூம்ல தங்கினோம். சனிக்கிழமை நைட் 11:30 க்கு V.I.P தரிசன டிக்கட் வைச்சிருந்தோம்.
மாமியார் சனிக்கிழமைதான் பெருமாளுக்கு முடியிறக்கணும் அப்படின்னு சொன்னாங்க. அதனால மலைக்கு வண்டியில போலாம்னு முடிவு பண்ணி, மதியம் 1 மணிக்கு மொட்டையடிக்கிற மெயின் ஹால் வந்துட்டோம்.
கியூ ரொம்ப இருந்தது. 8 டிக்கட் வாங்கிட்டு கியூக்குள்ளார நுழைஞ்சோம். volunteers கூட்டத்தை batch by batchஆ பிரிச்சு அனுப்பி வைச்சிட்டு இருந்தாங்க. ஒரு 3மணிநேரம் கழிச்சு மொட்டையடிக்கிற இடத்துக்குள்ள வந்தோம். முதல்ல என் வீட்டுக்காரர், கிட்ட பாப்பாவை மடியில உக்காரவைச்சு மாமியார் என்னை பிடிச்சுக்க சொன்னாங்க. என் மாமியாரும் பக்கத்திலயே ஒரு மக்ல தண்ணி மோந்து அவங்க தலையில ஊத்தி கிட்டு, இன்னொரு இடத்தில மொட்டையடிக்க உக்காந்தாங்க. பாப்பா ரொம்ப அமைதியா இருந்தா எந்த பிரச்சினையும் பண்ணலை.
அடுத்து நாத்தனார் வீட்டுக்காரரும் மொட்டையடிக்க உக்காந்தாங்க. ஒரு 3 நிமிசத்தில் அவங்க மொட்டை ஒவர். என் நாத்தனார் 4 வயசு பையனை என் வீட்டுக்காரர் மடியில உக்காரவைச்சுக்கிட்டார். என் நாத்தனாரோட 11 வயசு பொண்ணு மொட்டையடிக்க மாட்டேன்னு அடம் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. இதற்கிடையில், அத்தை வந்து 3/4 மாசத்தில வளந்திடும் செல்லாம் அப்படின்னு அவங்க அவளை மடியில உக்கார வைசிட்டாங்க. பார்பரை பாத்து ஆரம்பிக்க சொன்னாங்க.
என் நாத்தனார் அவ ஜடையைப் பிரிச்சு விட்டுட்டிருந்தா. என்னையும் அதேமாதிரி என் ஜடையை பிரிச்சு விட சொன்னா. என் கை automaticஆ என் ஜடையை பிரிச்சு விட்டுகிட்டு இருந்தது. பக்கத்தில இருந்த தண்ணிய தலையில ஊத்தி, என் முடியை விரிச்சு விட்டா என் நாத்தனார். இதே மாதிரி நானும் அவ முடியை பண்ணினேன். நாத்தனார் பையனும் பொண்ணும் டாலடிக்கிற மொட்டைத்தலையோட எழுந்து வந்தாங்க. என் நாத்தனாரும் நானும் பசங்களுக்கு மொட்டையடிச்சு விட்ட பார்பருங்ககிட்டேயே உக்காந்தோம்.
பார்பர் என் கூந்தலை ஒரு 2/3 minutes மசாஜ் மாதிரி பண்ணிட்டு இருந்தார். மசாஜ் மாதிரி பண்ணிட்டு இருந்தார். நான் தலையை குனிஞ்சு சுத்தி என்னை எல்லாரும் பாக்கிற மாதிரியே தோணிக்கிட்டு இருந்தது. 2 சைடும் முடியை பிரிச்சு, லூசா முடி போட்டு விட்டாரு. அப்புறம் ஒரு பாதி பிளேடை எடுது கத்திக்குள்ள வைச்சாரு. என் தலையை முன்னாடி ஒரு கையால அழுத்திகிட்டு, கத்தி என் உச்சியில இருந்து பின்னாடி போயிட்டே இருந்தது. முதல்ல கொஞ்சம் கொஞ்சமா வழிச்சு விட்டவர், இப்ப உச்சியில ஆரம்பிச்சு பின்னங்கழுத்து வரை வழிச்சு விட்டாரு. என் தலையை மேல உயர்த்தினப்ப, என் பின்னாடி முழுக்க மொட்டையடிச்சாச்சுன்னு தெரிஞ்சது. என் தலையை வலது பக்கமா திருப்பினாரு. பக்கத்தில என் நாத்தனார் பாதி மொட்டையில பாத்ததும் எனக்கு ஒரு மாதிரியா இருந்தது. என் நாத்தனார் என்னைப் பாத்து சிரிச்ச மாதிரி இருந்தது. நானும் ஒரு மாதிரி சிரிச்சு வைச்சேன், வெக்கத்தோட. என் ரைட் சைடும், முன்னாடி தலையும் வழிச்சு முடிச்சுட்டு, எல்லா பக்கமும் 2/3 இழுப்பு வழிச்சு விட்டாரு. என் மடியில, மேல சுத்தி விழுந்து கிடந்த முடியை, தட்டிவிட்டுகிட்டே எழுந்தேன். என் நாத்தனார், வீட்டுக்காரர், மாமியார் எல்லாரையும் பாக்க வெக்கமா இருந்தது. நாத்தனார் மொட்டையில பாக்க ரொம்ப பிரைட்டா இருந்த மாதிரி தெரிஞ்சா. மாமியார் என் கையை பிடிச்சுகிட்டாங்க. எனக்கும் ரொம்ப அமைதியான ஒரு பீல் இருந்தது. தரிசனம் முடிச்சுட்ட

Comments

Popular posts from this blog

மொட்டை காதலி

கிராமத்து மல்லிகா